மத்திய அரசானது நாஷா முக்த் பாரத் அபியான் எனும் திட்டத்திற்கான ஒரு வலைதளத்தைத் தொடங்கியுள்ளது.
இது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரமாகும்.
இந்த வலைதளமானது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.