இந்திய இரயில்வே நிர்வாகமானது, இரயில்களின் இயக்கங்களைப் பற்றிய (போக்குவரத்து) நிகழ்நேரத்தில் தன்னிச்சையாகக் கண்காணிப்பதற்காக நிகழ்நேர இரயில் தகவல் அமைப்பை நிறுவி வருகிறது.
நிகழ்நேர இரயில் தகவல் அமைப்பானது இந்திய இரயில்வே நிர்வாகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.
இது தற்போது இரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தினால் செயல்படுத்தப் படுகிறது.
இரயில்களின் இயக்க வேகம் குறித்தத் தகவலானது ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒருமுறை தொடர்ந்து வழங்கப்படுகிறது.