தெற்கு - மத்திய ரயில்வேயின் சுமார் 500 பயணியர் ரயில் என்ஜின்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நிகழ்நேர ரயில் தகவல் அமைப்புடன் (Real-time Train Information System - RTIS) பொருத்தப் பட்டுள்ளன.
இந்த ரயில்களின் பயணம் முழுவதிற்கும் அவற்றின் துல்லியமான வேகத்தையும் இயக்கத்தையும் கண்காணிக்க RTIS பயன்படுத்தப் படும்.
இது இஸ்ரோ – இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் புவியிடங் காட்டி உதவியுடன் செயல்படும் பெரிதாக்கப்பட்ட புவியியல்சார் வழிசெலுத்தல் அமைப்பான இந்தியாவின் “ககன்” அமைப்பின் உதவியுடன் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.