TNPSC Thervupettagam

நிக்கலைப் பிரித்தெடுப்பதற்கான புதிய முறை

June 12 , 2025 2 days 15 0
  • ஜெர்மனியில் உள்ள அறிவியல் ஆய்வாளர்கள் நிக்கலைப் பிரித்தெடுப்பதற்கான ஒரு படிநிலையிலான  கார்பன் உமிழ்வு இல்லாத முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த முன்மொழியப்பட்ட முறையானது, சுமார் 18% வரையில் அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும், நேரடி கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை 84% வரையில் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • தற்போது, ​​ஒரு டன் நிக்கலை உற்பத்தி செய்வதால் தோராயமாக 20 டன் கார்பன் உமிழ்வு மாசு ஏற்படுகிறது.
  • 2040 ஆம் ஆண்டிற்குள் நிக்கலுக்கான உலகளாவியத் தேவை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் மிகவும் குறிப்பாக ஒடிசாவின் சுகிந்தா பகுதியில் கணிசமான நிக்கல் லேட்டரைட் இருப்பு உள்ளது.
  • இந்த இருப்புகளில் நிக்கல் ஆனது, 0.4-0.9% நிக்கல் லிமோனைட்டாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்