யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ பவளப் பாறையில் சுமார் 70% பவளப்பாறைகள் அழிந்து விட்டன.
ஆஸ்திரேலியாவின் மிகவும் நீளமான மற்றும் மிகவும் தீவிரமான கடல் சார் வெப்ப அலையால் இந்த இழப்பு ஏற்படுகிறது.
வடக்கு காயல் (லகூன்) தளங்களில் எட்டு தளங்களில் பவளப் பாறைகளின் தற்போது 60 சதவீதத்தினைத் தாண்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கணக்கிடப்பட்ட 1,600 பவளப்பாறைகளில், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 600 மட்டுமே மீண்டன.
வெரோனின் டியுப் பவளப்பாறை மற்றும் லெசர் நாப் பவளப்பாறை போன்ற சில மீள் தன்மை கொண்ட இனங்கள் இங்கு உயிர் பிழைத்தன ஆனால் ஸ்டாக்ஹார்ன் பவளப் பாறைகள் மற்றும் மெல்லிய பர்டுநெஸ்ட் பவளப்பாறைகள் போன்ற அதிகளவில் காணப் படும் இனங்கள் அழிந்தன.
பவளப்பாறைகள் உலகளவில் உள்ள கடல் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு ஆதரிக்கின்றன எனவே அவற்றின் பெருமளவிலான அழிவு ஒட்டு மொத்த கடல் சார் பல்லுயிரியலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.