மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி 2.0 (NIDHI 2.0 – National Integrated Database of Hospitality Industry – விருந்தோம்பல் தொழில் துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத் தளம்) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது 2021 ஆம் ஆண்டு உலகச் சுற்றுலாத் தினத்தன்று (செப்டம்பர் 27) தொடங்கப் பட்டது.
இந்த நிதித் திட்டமானது சுற்றுலாத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
இது சுற்றுலாத் துறையினை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையின் வணிகம் செய்தலை எளிதாக்குதல் போன்றவற்றை வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.