2025–26 ஆம் நிதியாண்டின் முதல் (ஏப்ரல்–ஜூன் 2025) காலாண்டிற்கான "5வது காலாண்டு வர்த்தக கண்காணிப்பு அறிக்கையை" நிதி ஆயோக் அமைப்பானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியன்று வெளியிட்டது.
இது தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதிகள், சேவைகள் சார்ந்த வளர்ச்சி மற்றும் இறக்குமதிக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அறிக்கையின் கருத்துரு இந்தியாவின் வாகன ஏற்றுமதி என்பதாகும்.
இந்த அறிக்கையானது வாகனங்கள், வாகனக் கூறுகள், உலகளாவியத் தேவை மற்றும் மதிப்புச் சங்கிலி ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்கிறது.
உலகளாவிய வாகனத் துறையில் ஏற்றுமதி போட்டித் தன்மை மற்றும் சந்தைப் பங்கை மேம்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கிறது.