TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அறிக்கை 2025

December 22 , 2025 3 days 62 0
  • இந்தியாவில் உள்ள பொது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது.
  • இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவு (GERD) 2020–21 ஆம் ஆண்டில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை எட்டியது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.6% முதல் 0.7% வரை ஆகும்.
  • இந்தியாவின் மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினத்தில் அரசுத் துறை 63.6% பங்களிக்கிறது.
  • வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் பொது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினத்தில் 51% பங்களிக்கின்றன, அதைத் தொடர்ந்து சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் பங்களிக்கின்றன.
  • பொது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் சுமார் 36% தென்னிந்தியாவில் அமைந்துள்ளன, அதே நேரத்தில் வடகிழக்குப் பிராந்தியத்தில் 1.8% மட்டுமே உள்ளன.
  • மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் கிட்டத்தட்ட 48% ஆனது நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பத்து நகரங்களில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்