நிதி ஆயோக் அமைப்பானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்து "A Comprehensive Framework to Promote Affordable Housing" என்ற அறிக்கையைத் தயாரித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மலிவு விலையிலான வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்கச் செய்பவர்களுக்கு 100% வரி விலக்கு மீண்டும் அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது.
குறைந்த வருமான வீட்டுவசதிக்கான கடன் இடர் உத்தரவாத நிதித் திட்டத்தின் (CRGFTLIH) கீழ் கடன் வரம்பு இரட்டிப்பாக 40 லட்சம் ரூபாயாக முன்மொழியப் பட்டு உள்ளது.
நிதிச் செலவுகளைக் குறைக்க, மனை விற்பனை முதலீட்டு அறக்கட்டளைகளிலிருந்து (REITs) வரும் மூலதன ஆதாயங்கள் மற்றும் வாடகை வருமானத்தில் வரி விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்தப் பிரிவினர் (EWS) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுவைச் சேர்ந்த (LIG) வாங்குபவர்களுக்கு சலுகை நிதிக்காக தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) வரி இல்லாத பத்திரங்களை வெளியிடலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ் உள்ளவை உட்பட, மலிவு விலையிலான வீட்டு வசதித் திட்டங்களுக்கு முத்திரை வரி, பதிவுக் கட்டணம் மற்றும் நிலப் பயன்பாட்டு கட்டணங்களை மாற்றுதல் ஆகியவை விலக்கு அளிக்கப் படலாம்.