TNPSC Thervupettagam

நிதி ஆயோக் - ஆரக்கிள் ஒப்பந்தம்

September 30 , 2018 2444 days 809 0
  • நிதி ஆயோக், சங்கிலித் தொகுதி (Block Chain) முறையிலான பதிவேடு மற்றும் இணைய தள விவகாரங்கள் (Internet of Things) ஆகியவற்றின் மூலம் மருந்துகளின் உண்மைநேர விநியோகப் பாதையை கட்டுப்படுத்த ஆரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் ஒப்பந்தத் தீர்மானம் (Statement of Intent - SoI) ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
  • இதன் நோக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பெருகி வரும் பிரச்சினையைத் தடுப்பதாகும். இம்முயற்சியில் ஸ்டிரைட்ஸ் பார்மா சயின்சஸ் (Strides Pharma Sciences) மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியோர் பங்கேற்பர்.
  • சங்கிலித் தொகுதி தொழில்நுட்பமானது, மருந்துகளைத் தயாரிப்பவரின் விநியோகப் பாதையில் அம்மருந்துகளை (வரிசை எண், ஸ்கேனிங், அடையாள அட்டை,) பற்றி நிரந்தரமாகப் பதிவு செய்ய உதவும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்