TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் பள்ளிக் கல்வித் தரக் குறியீடு

October 9 , 2019 2127 days 1030 0
  • நிதி ஆயோக்கின் பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டின் (School Education Quality Index - SEQI) படி, பள்ளி கல்வித் தரத்தைப் பொறுத்தவரை கேரளாவும் தமிழகமும் சிறந்த மாநிலங்களாக தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
  • கேரளாவுக்கு 82.2 சதவிகித மொத்த மதிப்பீட்டுப் புள்ளியானது தரப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் தமிழ்நாடு 73.4 சதவிகித மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
  • SEQI அறிக்கையானது 2016-2017 ஆம் ஆண்டிற்கான கல்வித் தரத்தை 30 குறிகாட்டிகளின் அடிப்படையிலும் 2 பிரிவுகளின் கீழும் ஆய்வு செய்தது.
    • பிரிவு 1: முடிவுகள்
      • பகுதி 1: கற்றல் முடிவுகள்
      • பகுதி 2: அணுகல் முடிவுகள்
      • பகுதி 3: உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சார்ந்த முடிவுகளுக்கான வசதிகள்
      • பகுதி 4: நடுநிலைமை சார்ந்த முடிவுகள்
    • பிரிவு 2: கல்வி சார்ந்த முடிவுகளைப் பெறுவதற்கு உதவும் நிர்வாகச் செயல்பாடுகள்.
  • ஒட்டு மொத்த செயல்திறனானது கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குறைந்திருக்கின்றது.
  • ஏழு ஒன்றியப் பிரதேசங்களும் அவற்றின் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண்களில் முன்னேற்றம் கண்டுள்ளன.
  • மிசோரம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிக் கல்வி சார்ந்த செயல்திறன் மற்றும் தரவரிசை குறைந்திருக்கின்றது.
  • இந்தக் குறியீட்டில்  ஒட்டுமொத்த செயல்திறன் என்ற பிரிவில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அரசின் சிந்தனைச் சாவடி  வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்