நிதி ஆயோக்கின் பிட்ச் டூ மூவ் (Pitch To Move) போட்டி
August 16 , 2018 2554 days 779 0
இந்தியாவின் புதிதாக தொழில் முனைவோர் தங்கள் வியாபார யோசனைகளை புகழ் பெற்ற மன்றத்திடம் வழங்குவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குவதற்காக நிதி ஆயோக் ‘பிட்ச் டூ மூவ்’ என்ற போட்டியை துவங்கியுள்ளது.
இந்தத் தளத்தை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் உள்ள புதிய தொழில் நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தொழில் தலைவர்கள் மற்றும் கூட்டு முதலாளிகளிடம் வழங்கி முதலீடுகளைப் பெற முடியும்.
இது இன்வெஸ்ட் இந்தியா (Invest India) மற்றும் இந்திய மோட்டார் தயாரிப்பாளர் சங்கத்துடன் (Society of Indian Automobile manufactures - SIAM) இணைந்து நிதி ஆயோக்கால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.