இந்திய மாநிலங்களின் நிதி நிலையை மதிப்பிடுவதற்காக நிதி ஆயோக் 'நிதி ஆரோக்கியக் குறியீடு (FHI) 2026' என்ற குறியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அரசுக் கடனில் மாநிலங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டு உள்ள நிலையில் முக்கிய பொதுச் சேவைகளையும் வழங்குகின்றன எனவே அவற்றின் நிதியை முறையாக மதிப்பீடு செய்வது அவசியமாகிறது.
ஒடிசா, கோவா மற்றும் ஜார்கண்ட் ஆகியன 'சாதனையாளர்' (Achiever) பிரிவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலங்களாகும் என்ற நிலையில் இவை அதிக சொந்த வரி வருவாய், பெரிய மூலதனச் செலவு (மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4–5%) மற்றும் குறைந்த நிதிப் பற்றாக்குறை (GSDP-இல் 3% க்கும் குறைவு) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகியன கடைசி நிலையில் உள்ள மாநிலங்களாகும் என்ற நிலையில் அதிக வளர்ச்சி சாரா செலவுகள் மற்றும் பலவீனமான நிதி முறைகள் இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.
வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளன என்பதோடு பலவீனமான வருவாய் மற்றும் தொடர்ச்சியான நிதி நெருக்கடி காரணமாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகியவை பின்தங்கியுள்ளன.
இக்குறியீடு செலவினத் தரம், வருவாய் திரட்டல், நிதி விவேகம், கடன் குறியீடு மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகிய ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில் மாநிலங்களை மதிப்பிடுகிறது, இதற்காக இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரிடமிருந்து (CAG) தரவுகள் பெறப் படுகின்றன.