2025 ஆம் நிதியாண்டிற்கான (FY) நிதி உள்ளடக்க (FI) குறியீடு 67 சதவீதமாக மேம்பட்டு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 64.2 சதவீதத்திலிருந்து ஒரு அதிகரிப்பு ஆகும்.
இந்த அதிகரிப்புக்கு அதிக பயன்பாடு, மேம்பட்ட தரம் மற்றும் நிதி உள்ளடக்கத்தினை அதிகரிக்கும் தொடர்ச்சியான நிதிக் கல்வியறிவு முயற்சிகள் காரணமாகும்.
பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட கூட்டு நிதி உள்ளடக்கக் குறியீடு முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மார்ச் மாதத்தில் முடிவடையும் 2021 ஆம் நிதியாண்டிற்காக வெளியிடப்பட்டது.
வங்கிகள், முதலீடுகள், காப்பீடு, அஞ்சல் சேவைகள் மற்றும் ஓய்வூதியங்களிலிருந்து தரவை உள்ளடக்கிய இந்தக் குறியீடு, இந்தியாவில் நிதி உள்ளடக்கம் பற்றிய விரிவான கண்ணோட்டத்தினை வழங்குகிறது.