இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிதி நிலைத்தன்மை அறிக்கையை (FSR) 2026 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் தேதியன்று வெளியிட்டது.
FSR என்பது நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு சபையின் (FSDC) துணைக் குழுவின் உள்ளீடுகளுடன் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்பட்ட ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் அறிக்கையாகும்.
இந்தியாவின் இறையாண்மை கடன் நிலையானது என்றும், S&P மதிப்பீட்டை 'BBB' ஆக மேம்படுத்துவதன் மூலம் ஆதரிக்கப்படுகிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (SCB) வலுவான மூலதன இடையகங்களைப் பேணுகின்றன என்பதோடு மேலும் மொத்த வாராக் கடன்கள் (GNPA) விகிதம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2.2% ஆகக் குறைந்துள்ளது.
நிதித் தொழில்நுட்பத் துறையில் கடன் வழங்குதல் 36.1% அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வெளிநாட்டு நாணய ஸ்டேபிள்காயின்கள் இந்தியாவின் பணவியல் கொள்கையை பாதிக்கலாம்.
வர்த்தகம் மற்றும் மூலதனப் பாய்வுக் காரணிகள் காரணமாக அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.