நிதி நிலையறிக்கை 2026 - ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம்
February 4 , 2026 74 days 245 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் உள்ள 15 தொல்லியல் தளங்களை துடிப்பான மற்றும் அனுபவமிக்க கலாச்சாரத் தலங்களாக மேம்படுத்த முன்மொழிந்தார்.
இதில் லோதல், தோலாவிரா, ராக்கிகர்கி, ஆதிச்சநல்லூர், சாரநாத், ஹஸ்தினாபுரம் மற்றும் லே அரண்மனை ஆகியவை அடங்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில், ஹரியானாவில் உள்ள ராக்கிகர்கி மற்றும் குஜராத்தில் உள்ள தோலாவிரா மற்றும் லோத்தல் போன்ற சிந்து சமவெளி நாகரிக (IVC) தளங்களும் அடங்கும்.
மேலும், சாரநாத் மற்றும் ஹஸ்தினாபுரம் போன்ற உத்தரப் பிரதேசத்தில் உள்ள பௌத்த தளங்களும் இதில் அடங்கும்.
இந்தியாவின் பழமையான தொல்லியல் தளங்களில் ஒன்றான ஆதிச்சநல்லூர், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இது ஆரம்பகால இரும்புக்கால வாழ்க்கை மற்றும் பண்டைய தமிழ் நாகரிகம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
இந்தியத் தொல்லியல் துறை (ASI) அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதி முழுவதும் நடந்து செல்லும் சரிவுப் பாதைகளை நிறுவிய முதல் தளம் இதுவாகும்.
ஆதிச்சநல்லூர் அதன் ஈமத்தாழிகளுக்காக மிகவும் அறியப்படுகிறதுஎன்ற நிலையில் இவை இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய களிமண் பானைகள் ஆகும் என்பதோடுஇவற்றுடன் இரும்புக் கருவிகள், ஆபரணங்கள் மற்றும் மட்பாண்டங்களும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஈமத்தாழிகள் முதன்முதலில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரீஎன்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன.