நிதி மற்றும் ஏய்ப்பு குறித்த FATF அறிக்கை
- நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) ஆனது, ஆயுதப் பரவல் நிதி (PF) மற்றும் தடைகள் ஏய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது.
- இதில் PF என்பது உலகளாவியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை (WMD) ஆதரிப்பதற்காக நிதி திரட்டுதல் என்பதாகும்.
- வட கொரியா, ஈரான், ரஷ்யா போன்ற சில நாடுகளிலிருந்தும், அரசு சாரா தீவிரவாதம் மற்றும் குற்றவியல் குழுக்களிடமிருந்தும் முக்கிய அச்சுறுத்தல்கள் வருகின்றன.
- கட்டமைப்பு மற்றும் குறிப்பிட்ட துறைகள் ரீதியாக தேசிய அமைப்புகளில் உள்ள பல பலவீனங்களை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
- இது 19 நாடுகளைச் சேர்ந்த 38 வழக்குகளைப் பகுப்பாய்வு செய்து, 4 பொதுவான PF மற்றும் தடைகள் ஏய்ப்பு முறைகளை அடையாளம் கண்டுள்ளது.
- FATF ஆனது, உலக நாடுகள் தங்கள் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக 4 முக்கியப் பரிந்துரைகளை வழங்குகிறது.
- WMD ஆயுதப் பரவலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட UN தடைகளை சுமார் 16% நாடுகள் மட்டுமே முழுமையாக செயல்படுத்துகின்றன.

Post Views:
34