2024-25 ஆம் நிதியாண்டு நிதிநிலை மதிப்பீடுகளில் (FY25 BE) மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கிடையே டெல்லி 93.2% என்ற அளவில் அதிகபட்ச சொந்த வருவாய்ப் பங்கைப் பதிவு செய்துள்ளது.
ஹரியானா 80.4% உடன் இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து தெலுங்கானா 78.4% உடன் அடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
கர்நாடகா 77.3% உடன் நான்காவது இடத்தையும், தமிழ்நாடு 75.5% உடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.
மணிப்பூர் மிகக் குறைந்த சொந்த வருவாய்ப் பங்காக 10%-ஐப் பதிவு செய்துள்ளது.
சொந்த வருவாய் என்பது ஒரு மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் வரியாக மற்றும் வரி அல்லாத வருவாயாகக் கிடைக்கும் பங்கைக் குறிக்கிறது.