காங்கோவின் நியிராகோங்கோ எரிமலையானது சமீபத்தில் வெடித்தது.
நியிராகோங்கோ எரிமலையானது விருங்கா மலைத்தொடரில் அமைந்துள்ள 3,740 மீ உயரமுடைய செயல்படும் நிலையிலுள்ள ஒரு அடுக்கு எரிமலையாகும்.
நியிராகோங்கோ எரிமலையானது கோமாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
இது காங்கோ மக்களாட்சி குடியரசின் விருங்கா தேசியப் பூங்காவினுள்ளே அமைந்து உள்ளது.
ஆப்பிரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளில் 40 சதவீதமானது நியிராகோங்கோ மற்றும் அதனருகே உள்ள நியாமுரகிரா ஆகிய எரிமலைகளினால் ஏற்பட்டவையாகும்.