கடுமையான பேச்சுக் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான தகவல்தொடர்புகளை மீளுருவாக்கம் செய்யும் ஒரு நுட்பத்தில் நியூராலிங்க் நிறுவனம் முன்னேற்றம் கண்டு உள்ளது.
சமீபத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆனது அதன் மிகவும் புதுமையான மூளையில் சில்லு பொருத்துதல் தொழில்நுட்பத்திற்காக வேண்டி அந்த நிறுவனத்திற்கு ஒரு சாதன அங்கீகாரத்தினை வழங்கியது.
உயிருக்கு ஆபத்தானப் பாதிப்புகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சிகிச்சையை உறுதி அளிக்கும் மருத்துவச் சாதனங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்த சாதனமானது, மூளைத் தண்டு முடக்குவாதம் (ALS), பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், பெருமூளை வாதம், தண்டு வட மரப்பு நோய் மற்றும் இதர பிற நரம்பியல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.
நியூராலிங்க் என்பது எலோன் மஸ்க் நிறுவிய ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.