தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் (ARCI), நியோடைமியம்-அயன்-போரான் (NdFeB) காந்தங்களைத் தயாரிப்பதற்கான ஒரு சோதனை ஆலை அமைக்கப்பட்டது.
NdFeB காந்தங்கள் நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் ஆகியவற்றால் செய்யப்பட்ட வலிமையான நிரந்தர காந்தங்களாகும்.
இவை மிக அதிக காந்த வலிமையையும், காந்தத்தன்மையை இழக்காத வலுவான எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளன.
உற்பத்தி முறைகளின் அடிப்படையில் இந்த காந்தங்கள் உருக்கி இணைக்கப்பட்டது, பிணைக்கப்பட்டது மற்றும் சூடாக அழுத்தி இணைக்கப்பட்டது என மூன்று வகைப்படும்.
இவை அலைபேசிகள், காதொலி கேட்பான்கள், வன் வட்டுகள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மின்னணு சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.