TNPSC Thervupettagam

நிர்பய் சேத்னா முன்னெடுப்பு

June 29 , 2026 9 days 80 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது உலகின் மிகப்பெரிய பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின உணர்திறன் குறித்த முன்னெடுப்பான 'நிர்பய் சேத்னா'-வைத் தொடங்கியுள்ளது.
  • நிர்பய் சேத்னா என்பது நிர்பயா நிதியின் கீழ் நிதியளிக்கப்படும் 'நிர்பய் ரஹோ' திட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பஞ்சாயத்துகளையும் உள்ளடக்கும்.
  • 28,500 முதன்மைப் பயிற்சியாளர்களின் ஆதரவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட 17.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளுக்கு பாலின சமத்துவம், பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து இத்திட்டம் பயிற்சியளிக்கும்.
  • 'நிர்பய் நேத்ரி' திட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட 14.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு சட்ட அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கும்.
  • பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் 'நிர்பய் திருஷ்டி' திட்டத்தின் கீழ் CCTV கேமராக்கள் பொருத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்