நிறுவனங்கள் சட்டத்தின் (Companies Act) கீழ் குற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்கான குழு
July 26 , 2018 2702 days 1129 0
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Corporate Affairs - MCA) நிறுவனங்கள் சட்டம், 2013ல் உள்ள தண்டனைக்குரிய விதிகளை மதிப்பாய்வு செய்வதற்கான 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்துள்ளது.
இக்குழு பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சில குற்றங்களின் குற்றவிலக்கினை ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில குற்றங்கள் குற்றவிலக்கு செய்யப்பட வேண்டும் என்பதாலும் சில குற்றங்களை நிர்வாக அளவிலான நுட்பத்தில் கையாள வேண்டும் என்பதாலும் MCA ஆனது நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் சில குற்றங்களை மதிப்பாய்வு செய்ய முற்படுகிறது.
இக்குழு அதன் அறிக்கையினை 30 நாட்களுக்குள் மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்கும்.