நிறுவனங்கள் சட்டம், 2013-ஐ திருத்துவதற்கான அவசரச் சட்டம்
November 10 , 2018 2378 days 847 0
நிறுவனங்கள் சட்டம் 2013-ஐ திருத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்தலுக்கான முன்மொழிதலை மத்திய அமைச்சரவை அங்கீகரித்திருக்கின்றது.
இதன்படி, குடியரசுத் தலைவர் ஷரத்து 123-ன் கீழ் ஒப்புதலை தந்திருக்கின்றார். இது பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த சட்டத்தின் திருத்தங்கள் வியாபாரம் செய்வதை எளிமையாக்குவதை மேம்படுத்திடவும் சிறந்த இணக்க நிலைகளை உறுதி செய்திடவும் வேண்டி திட்டமிடப்பட்டு இருக்கின்றது.
நிறுவனச் சட்டத்தைத் திருத்துவதற்கான அவசரநிலைச் சட்டம் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயங்களின் மீதான தடைகளை விலக்கவும் நிறுவனங்களின் சிறிய குற்றங்களை குற்றப் பார்வையிலிருந்து நீக்கிடவும் எண்ணுகிறது.
இந்த அவசரச் சட்டம் 90 சதவிகித வழக்குகளை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயங்களிடமிருந்து பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் உள்ள பிராந்திய இயக்குநர்களிடம் பரிமாற்றம் செய்யும்.