நில அதிர்வு ஆபத்துப் பகுதிகளின் நுண்மண்டலமாக்கல் திட்டம்
January 21 , 2020 2026 days 693 0
மத்தியப் புவி அறிவியல் அமைச்சகமானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் நில அதிர்வு அபாயம் ஏற்படும் பகுதிகளின் நுண்மண்டலமாக்கல் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தத் திட்டமானது சில போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நில அதிர்வு நடவடிக்கைகளின் அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இதுவரை, சிக்கிம் மாநிலத்திலும் பிற 8 நகரங்களிலும் நிலப்பகுதி வரைபடமாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அந்த 8 நகரங்களாவன டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, குவஹாத்தி, ஜபல்பூர், டேராடூன், அகமதாபாத் மற்றும் காந்திதாம் ஆகியவை ஆகும்.
நுண்மண்டலமாக்கல் நுட்பங்கள் நன்கு செயல்படுத்தப்படும் நாட்டிற்குச் சிறந்த உதாரணம் ஜப்பான் ஆகும்.
இது பற்றி
இது சில காரணிகளின் அடிப்படையில் பூகம்பப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய வாய்ப்பு உள்ள பகுதிகளைப் பிரிக்கும் ஒரு செயல்முறையாகும்.
இந்தக் காரணிகளில் அந்தப் பகுதிகளின் புவியியல் மற்றும் புவி இயற்பியல் பண்புகள் ஆகியவை அடங்கும்.
அவை நில அதிர்வு, நிலச்சரிவு, எளிதில் திரவமாக்கல், பாறை சரிந்து விழும் ஆபத்து மற்றும் பூகம்பங்களால் ஏற்படும் வெள்ளம் ஆகியவை அடங்கும்.