நிலக்கரி ஆலைகளில் உமிழ்வுக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துதல்
December 17 , 2023 507 days 270 0
இந்தியாவின் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு சதவீதத்திற்கும் குறைவானவை சல்பர் டை ஆக்சைடு உமிழ்வினைக் கட்டுப்படுத்தச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பின்பற்றியுள்ளன.
கனல் வாயு கந்தக நீக்க (FGD) அலகுகள், SO2 உமிழ்வைக் குறைப்பதற்கு முக்கியமானது ஆகும்.
இந்தியாவில் உள்ள நிலக்கரி ஆலைகளில் 16.5 ஜிகாவாட்ஸ் (GW) மட்டுமே கனல் வாயு கந்தக நீக்க (FGD) அலகுகள் மற்றும் சுழல் பாய்ம அடுக்கு எரிப்பு (CFBC) கொதி கலன்களை நிறுவியுள்ளது.
நாட்டின் 92 சதவீத நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் கனல் வாயு கந்தக நீக்க (FGD) அலகுகள் இல்லாமல் இயங்குகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய அளவில் கந்தக டை ஆக்சைடை வெளியேற்றும் நாடு இந்தியா ஆகும்.