நிலக்கரி சுரங்கச் சட்டங்களைத் திருத்துவதற்கான அவசரச் சட்டம்
January 13 , 2020 2045 days 749 0
1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு & ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் 2015 ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு பிரிவுகள்) சட்டம் ஆகியவற்றைத் திருத்துவதற்கான அவசரச் சட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இது எளிதில் தொழில் தொடங்குதல் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலத்தை எளிதாக்குதல் போன்றவற்றை உறுதிப்படுத்த உள்ளது.
இது அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும்.
இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய நிலக்கரி இருப்பினைக் கொண்டு இருந்த போதிலும், கடந்த ஆண்டு 235 மில்லியன் டன்கள் நிலக்கரியை இறக்குமதி செய்தது.
எனவே உலகில் நிலக்கரியை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நிலக்கரி உற்பத்தியை 2024 ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன்னாக அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2019-20 ஆம் நிதியாண்டில், இறக்குமதி இலக்கானது 660 மில்லியன் டன்களாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.