புது தில்லியில், நிலக்கரி அமைச்சகம் மற்றும் கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஆகியவை நிலக்கரி நிறுவனங்களுக்கான இந்தியாவின் முதல் துறை சார்ந்த விரிவான பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) கட்டமைப்பை வெளியிட்டன.
2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழான சட்டப்பூர்வ CSR விதிகளுக்குப் பிறகு, இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் துறை சார்ந்த CSR வழிகாட்டுதல் இது ஆகும்.
நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் நடைபெறும் CSR நடவடிக்கைகளை வெளிப்படை ஆனதாகவும், அளவிடக்கூடியதாகவும் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்காக இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம் (IICA) இதை வடிவமைத்துள்ளது.
2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 135வது பிரிவு, இந்தியாவில் உள்ள CSR விதிகளுக்குச் சட்ட அடிப்படையை வழங்குகிறது.
தலாசீமியா பால் சேவா யோஜனா திட்டத்தின் கீழ், CIL நிறுவனம் குழந்தைகளுக்கான 1,050க்கும் மேற்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளை முடித்துள்ளது. மேலும் 21 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் ஒரு நோயாளிக்கு ₹10 லட்சம் வரை வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் CIL நிறுவனத்தின் நன்ஹா சா தில் (Nanha Sa Dil) முன்னெடுப்பானது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்து 1,500-க்கும் மேற்பட்ட இலவச சீரமைப்பு இருதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது.