"Regulating Coal Operations: Environmental and Social Impacts through the Lens of the National Green Tribunal" என்ற தலைப்பிலான அறிக்கையை விகல்பா என்ற இலாப நோக்கமற்ற அமைப்பு வெளியிட்டது.
2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 73 சதவீதமாக இருந்தது.
இது 2031-32 ஆம் ஆண்டிற்குள் மின் உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 50 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்கள் காற்று, நீர் மற்றும் ஒலி மாசுபாட்டையும் நிலங்களின் தரமிழப்பினையும் ஏற்படுத்துகின்றன.
நிலக்கரி காணப்படும் பகுதிகளில் நிலக்கரி போக்குவரத்திலிருந்து வெளிவரும் தூசி மாசுபாடு PM10 அளவை ஒரு கன மீட்டருக்கு 460 மைக்ரோகிராமாக அதிகரித்தது.
இது அனுமதிக்கப்பட்ட வரம்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு சமவெளிகளில் எரிசாம்பல் அடைப்பு ஏற்படுவதால், அங்கு நீர் தேங்கி மற்றும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது.
எரி சாம்பலில் உள்ள நச்சுக் கூறுகள் சிலிகோசிஸ், புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளன.
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு அருகில் காணப்படும் காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்களின் மாசுபாடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிகப் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தின.
எண்ணூரில் உள்ளவை உட்பட பல நிலக்கரி ஆலைகள், உமிழ்வுத் தரவைத் தவறாகப் பதிவு செய்து மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியுள்ளன.