நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து சூரிய சக்தி திறன்
June 23 , 2025 6 days 44 0
இந்திய நாடானது, செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் திறனை மிகவும் அதிகளவில் கொண்ட உலகின் நான்காவது நாடாக உள்ளது.
63 பயன்படுத்தப்படாத சுரங்கத் தளங்கள் ஒரு சேர சுமார் 27.11 ஜிகாவாட் (GW) சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.
இது நாட்டின் தற்போதைய நிறுவப்பட்ட சூரிய சக்தி திறனில் சுமார் 37 சதவீதத்திற்குச் சமமாகும்.
தெலுங்கானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை மூடப்பட்ட அல்லது விரைவில் மூடப் படவுள்ளச் சுரங்கங்களில் இருந்து அதிக நிலம் கிடைக்கப் பெறும் வாய்ப்புடன் கூடிய முதல் 20 உலகளாவியப் பிராந்தியங்களில் அடங்கும்.
மற்ற 3 முன்னணி நாடுகளானது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.