நிலக்கரித் துறையில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு
August 31 , 2019 2190 days 606 0
நிலக்கரி சுரங்க மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கானப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திறமையான மற்றும் போட்டி மிகுந்த நிலக்கரிச் சந்தையை உருவாக்குவதற்கு சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதற்கு உதவுவதற்காக நிலக்கரி சுரங்க மற்றும் நிலக்கரி விற்பனை ஆகிய துறைகளில் நேரடியாக அல்லது அனுமதி ஏதும் தேவையற்ற வழியின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.