நிலச்சரிவு அபாயக் குறைப்பு மற்றும் அதனைத் தாங்கிக் கொள்ளும் திறன் மீதான முதலாவது சர்வதேச மாநாடு
December 3 , 2019 2236 days 802 0
2019 ஆம் ஆண்டின் ‘நிலச்சரிவு அபாயக் குறைப்பு மற்றும் அதனைத் தாங்கிக் கொள்ளும் திறன்” மீதான முதலாவது சர்வதேச மாநாடானது புது தில்லியில் நடத்தப் பட்டது.
இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது மாநாடான இது இந்தியாவின் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிலச்சரிவு அபாயக் குறைப்பு மற்றும் அதனைத் தாங்கிக் கொள்ளும் திறனுக்கானச் சூழ்நிலைக்கு உகந்த வகையில் பயனுள்ள அறிவு, அனுபவங்கள், தகவல் மற்றும் புதுமைகள் ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பதற்கு/ கலந்துரையாடுவதற்கு/பரப்புவதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் மற்றும் திற நிபுணர்களையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.