நிலத்தடி நீர் எடுத்தலால் புவியின் சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றம்
July 28 , 2023 889 days 538 0
புவி இயற்பியல் ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, நிலத்தடி நீர்ப் பிரித்தெடுத்தல் செயல் முறையால் பூமியின் சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமானது உலகளவில் கடல்நீர் மட்ட உயர்வுக்குப் பங்காற்றுகிறது.
நிலத்தடி நீர்ப் பிரித்தெடுத்தல் என்ற செயல்முறையானது, 1993 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் புவியின் சுழற்சி அச்சினைக் கிட்டத்தட்ட 80 சென்டி மீட்டர் கிழக்கு நோக்கிச் சாய்த்துள்ளது.
கிரகம் முழுவதும் பரவிக் காணப்படும் நீரின் அளவானது புவியின் நிறை எவ்வாறு சமன் செய்யப் படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
1993 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மக்கள் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றி உள்ளனர் அல்லது 6 மில்லிமீட்டருக்கும் மேலான கடல் நீர் மட்ட உயர்விற்கு வழி வகுத்துள்ளனர்.