TNPSC Thervupettagam

நிலத்தடி நீர் மாசுபாடு நெருக்கடி

August 13 , 2025 4 days 21 0
  • இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புறக் குடிநீரும், 65 சதவீத பாசன நீரும் நிலத்தடி நீரிலிருந்து பெறப்படுகின்றன.
  • மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (CGWB) 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நிலத்தடி நீர்த் தர அறிக்கையானது, 440 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 20 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகளில் நைட்ரேட் மாசுபாடு இருப்பதைக் குறிப்பிடுகிறது.
  • 9 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகளில் அதிகப்படியான ஃப்ளோரைடு கலப்பு உள்ளது என்பதோடு இது முதன்மையாக இராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பல் மற்றும் எலும்பு சார்ந்த ஃப்ளோரோசிஸ் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
  • பஞ்சாப் மற்றும் பீகாரில், ஆர்சனிக் அளவு, உலக சுகாதார அமைப்பின் (WHO) பாதுகாப்பான வரம்புகளை மீறுகிறது என்பதோடு இது புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
  • பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் உரங்கள் மற்றும் அதிகப்படியான நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் காரணமாக 100 ppb அளவிற்கு மேல் யுரேனியம் மாசுபாடு காணப்படுகிறது.
  • தொழில்துறை வெளியேற்றத்திலிருந்து வெளியாகும் ஈயம், காட்மியம், குரோமியம் மற்றும் பாதரசம் போன்ற கன உலோகங்கள் நரம்பியல் சேதம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
  • நிலத்தடி நீர் மாதிரிகளில் 13 சதவீதத்திற்கும் அதிகமானவை பாதுகாப்பான இரும்பு அளவை விட அதிகமாகக் கொண்டுள்ளன என்பதோடு இது இரைப்பை குடல் கோளாறுகளுக்கு வழி வகுக்கும்.
  • நிலத்தடி நீர் மாசுபாடு ஆனது எலும்பு சார்ந்த ஃப்ளோரோசிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்பதோடு இது 66 மில்லியன் மக்களைப் பாதிக்கிறது மற்றும் பல மாவட்டங்களில் ஆர்சனிக் மாசுபாடுகளுடன் தொடர்புடைய புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
  • நைட்ரேட் மாசுபாடு குழந்தைகளுக்கு ப்ளூ பேபி சின்ட்ரோம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவின் நிலத்தடி நீர் மாசுபாடு என்பது தினமும் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு பொது சுகாதார அவசரநிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்