நிலத்தடி நீர்ச் சட்டம் - 2020
February 14 , 2020
1924 days
770
- முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையானது நிலத்தடி நீர்ச் சட்டம் – 2020 என்ற ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- இச்சட்டமானது நீரில் மூழ்கக்கூடிய பம்புகளை பதிவு செய்வதைக் கட்டாயம் ஆக்குகின்றது.
- விவசாயிகள் மற்றும் வீட்டுப் பயனர்கள் பம்புகளைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
- இந்தச் சட்டமானது அனைத்து தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகளில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைப்பதைக் கட்டாயமாக்குகின்றது.
- நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நபர்கள் / நிறுவனங்களுக்குத் தண்டனையும் அபராதமும் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
Post Views:
770