நிலத்தினால் சூழப்பட்ட நாடுகள் குறித்த ஐ.நா. மாநாடு
August 13 , 2025 15 hrs 0 min 36 0
நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் குறித்த மூன்றாவது ஐக்கிய நாடுகளின் மாநாடு துர்க்மெனிஸ்தானின் அவாசா எனுமிடத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடு ஆனது அவாசா அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் 2024 ஆம் ஆண்டு முதல் 2034 ஆம் ஆண்டு வரையிலான அவாசா செயல் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Driving Progress Through Partnerships" என்பதாகும்.
வர்த்தகம் மற்றும் போக்குவரத்து சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் 32 நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.
துர்க்மெனிஸ்தான் ஆனது, எதிர்காலத்திற்கான உலகளாவிய மருத்துவம் என்ற சுகாதாரத் திட்டத்தினை முன் வைத்தது.
இது துபாயில் நடைபெற்ற 28வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP28) முதன் முதலில் முன் வைக்கப்பட்ட நிலையான போக்குவரத்து இணைப்பின் உலகளாவிய தகவல் அறிக்கையினை முன்மொழிந்தது.
இது 2030 ஆம் ஆண்டு முதல் 2040 ஆம் ஆண்டு வரையிலான ஹைட்ரஜன் ஆற்றல் உற்பத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
கழிவுகளைக் குறைப்பதற்காக மறுபயன்பாட்டினை சுழற்சி முறை பொருளாதாரத்திற்கான உலகளாவிய கட்டமைப்பையும் இது முன்மொழிந்தது.
கடல் பகுதியைப் பாதுகாப்பதற்கான காஸ்பியன் சுற்றுச்சூழல் முன்னெடுப்பு குறித்தும் துர்க்மெனிஸ்தான் எடுத்துரைத்தது.
உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் நெருக்கடிகளில் ஒன்றைத் தீர்ப்பதற்காக ஐ.நா.வின் ஆரல் கடல் படுகைத் திட்டத்தினை இது ஆதரித்தது.
இது 2025 ஆம் ஆண்டினை சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டாகவும் முன் மொழிந்தது.
இது துர்க்மெனிஸ்தானின் நடுநிலையின் 30 ஆம் ஆண்டு நிறைவையும், ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆம் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.