நிதி ஆயோக் ஆனது நிலப் பட்டங்கள் குறித்து மாநிலங்களுக்கான விதிகள் மற்றும் வரைவு மாதிரிச் சட்டத்தை வெளியிட்டுள்ளது.
இது உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தலை எளிதாக்குதல் மற்றும் வழக்குகளைக் குறைப்பதல் ஆகியவற்றை நோக்கமாக் கொண்டுள்ளது.
மாநில அரசுகள், அசையாச் சொத்துகளின் பட்டப் பதிவு அமைப்புகளின் உருவாக்கம், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்கான ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
நிலப் பிரச்சினைத் தீர்வு அதிகாரியின் ஆணையுடன் முரண்பட்டுள்ள தரப்பினர் இந்த ஆணை பிறப்பிக்கப் பட்டு 30 நாட்களுக்குள் நிலப் பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
நிலப் பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராக மனுக்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் ஒரு சிறப்பு அமர்வு அமைக்கப் படும்.
பின்னணி
நிலப் பதிவுகளின் தற்போதைய முறையானது காலனித்துவ காலத்தில் ஜமீன்தாரி முறையிலிருந்துப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
தற்பொழுது, நிலப் பட்டங்களுக்கான விதிமுறைகள் சொத்துகள் பரிமாற்றச் சட்டம், 1882 என்ற சட்டத்தால் வழங்கப்படுகின்றன.
நிலம் தொடர்பான ஆவணங்களின் பதிவுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் ஒரு முதன்மையான சட்டம் ‘பதிவுகள் சட்டம் – 1908’ என்ற சட்டம் ஆகும்.