நிலம் & நீர்வழி நடவடிக்கைகள் மற்றும் இணையவெளி நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடு
August 12 , 2025 46 days 103 0
பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைத் தளபதி (CDS) நிலம் & கடல் சார் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாட்டை வெளியிட்டார்.
இந்தக் கோட்பாடு, போர் மற்றும் அமைதி ஆகிய இரண்டு சூழலிலும் சிக்கலான இராணுவ சூழல்களில் நிலம் & கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் படைத் தளபதிகளுக்கு செயல்பாட்டு வழிகாட்டுதலை வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயல்படுத்தல் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் ஆயுதப்படைகளின் திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
இணையவெளிப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்குமான உத்திசார் வழிகாட்டுதலை வழங்கும் இது அனைத்து இராணுவ நிலைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.