இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது இதுவரை இல்லாத அளவிற்கு கனமான ஏவு வாகனமான நிலவிற்கான ஆய்வுப் பெட்டக ஏவு வாகனத்தை (LMLV) உருவாக்கி வருகிறது.
LMLV ஆனது 2040 ஆம் ஆண்டிற்குள் திட்டமிடப்பட்ட நிலவு ஆய்வுக் குழு பயணங்கள் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது நிலவிற்குச் சுமார் 27 டன் எடையுள்ள ஆய்வுக் கருவிகளையும், புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதைக்கு 80 டன் எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
இந்த ஏவு வாகனம் ஆனது மேம்படுத்தப் பட்ட கிரையோஜெனிக் மற்றும் பகுதியளவு-கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளைப் பயன்படுத்தும்.
இஸ்ரோவின் ஏவு வாகன பரிணாமம் ஆனது 1963 ஆம் ஆண்டில் ஆய்வு ஏவு வாகனங்களுடன் தொடங்கியது, இதில் SLV-3, ASLV, PSLV, GSLV மற்றும் LVM-3 ஆகியவை அடங்கும்.
மனித விண்வெளி ஆய்வுப் பயணம் போன்ற இந்தியாவின் இலட்சிய இலக்குகளுக்கான ஆற்றல் மற்றும் திறனில் LMLV முந்தைய அனைத்து ஏவு வாகனங்களையும் விஞ்சும்.