TNPSC Thervupettagam

நிலவில் டைட்டானியம் நிறைந்த பாறைகள்

March 28 , 2026 3 days 49 0
  • நிலவில் டைட்டானியம் நிறைந்த பாறைகள் எவ்வாறு உருவானது என்பது குறித்து கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL) இணைந்து புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளன.
  • பூமியில் உள்ள பாறைகளில் டைட்டானியம் டை ஆக்சைடு (TiO) 2%-க்கும் குறைவாகவே உள்ளது, ஆனால் நிலவின் பாறைகளில் இது 18% வரை மிக அதிகமாக உள்ளது.
  • நிலவின் உட்புற நிலையை ஆய்வு செய்ய அறிவியலாளர்கள் உயர் அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலை சோதனைகளை நடத்தினர்.
  • நிலவின் மேலடுக்குப் பகுதியில் உருகும் மற்றும் கலக்கும் இரு-நிலை செயல்முறை நடைபெறுவதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • இல்மனைட் (டைட்டானியம் தாது) கொண்ட அடர்த்தியான அடுக்கு நிலவின் உட் புறத்தில் மூழ்கி உருகி, டைட்டானியம் நிறைந்த மாக்மாவை உருவாக்கியது.
  • இந்த மாக்மா பின்னர் நிலவின் மேற்பரப்பிற்கு வந்து டைட்டானியம் நிறைந்த எரிமலைப் பாறைகளாக மாறியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்