TNPSC Thervupettagam
April 25 , 2026 11 hrs 0 min 52 0
  • சீன அறிவியலாளர்கள் இது வரை அடையாளம் காணப் பட்ட 11வது சந்திர கனிமமான சீரியம்-மக்னீசியம் சேஞ்ச்சைட் என்ற புதிய சந்திர கனிமத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.  
  • சீனப் புவியியல் ஆய்வு மையத்தால் சீனாவில் சேகரிக்கப்பட்ட 44 கிராம் எடையுள்ள சந்திர விண்கல்லில் இந்தக் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • நிறமற்ற, ஒளிரக்கூடிய, மற்றும் உடையக்கூடிய இது 10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான படிகத் துகள்களுடன் தனித்துவமான ஒளிரும் தன்மையைக் காட்டுகிறது.
  • சீரியம் என்பது விளக்குகள் மற்றும் மின்னணுவியலில் பயன்படுத்தப்படும் ஒரு அரிய பூமித் தனிமம் என்பதால், LED (ஒளி உமிழும் டையோடு) தொழில்நுட்பத்திற்கு இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானது.
  • இது அடுத்த தலைமுறை மின்னணு சாதனங்களில் ஆற்றல் திறன், பிரகாசம் மற்றும் ஆயுளை மேம்படுத்த உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்