“ஆர்ட்டிமிஸ்” என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காலத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் நிலவிற்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்வதாகும். இது குறிப்பாக நிலவில் முதல் பெண் வீராங்கனை தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அப்போலோ நிலவுத் திட்டம் கிரேக்க கடவுளான அப்போலோ நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
ஆர்ட்டிமிஸ் என்பது கிரேக்கப் புராணத்தில் அப்போலோவின் இரட்டைச் சகோதரிகள் ஆகும்.
திட்டமிடப்பட்டுள்ள ஆர்ட்டிமிஸ் வரிசையிலான திட்டங்கள் பின்வருமாறு
ஆர்ட்டிமிஸ் 1
நிலவைச் சுற்றி செலுத்தப்படவிருக்கும் ஒரு ஆளில்லா விண்வெளித் திட்டம்
ஆர்ட்டிமிஸ் 2
நிலவைச் சுற்றி செலுத்தப்படவிருக்கும் மனிதர்களைக் கொண்ட ஒரு திட்டம்
ஆர்ட்டிமிஸ் 3
முதல் பெண் விண்வெளி வீராங்கனை உள்பட விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவது
இந்த மூன்று திட்டங்களும் ஒரு மிகப்பெரிய செலுத்து வாகனமான போயிங் மூலமான விண்வெளி செலுத்து அமைப்பினால் செலுத்தப்படவிருக்கின்றன.
இவற்றைத் தவிர்த்து, இந்தத் திட்டம் நிலவின் துணை நிலையமான “கேட்வே” எனும் நிலையத்திற்கான கட்டுமானத் தொகுதிகளையும் கொண்டு செல்லவிருக்கின்றது.
இந்தத் திட்டச் செலுத்துதல்கள் தனியார் விண்வெளி நிறுவனங்களால் மேற்கொள்ளப் படவிருக்கின்றன.