TNPSC Thervupettagam

நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் கலவை

May 25 , 2023 754 days 371 0
  • AIX கனெக்ட் (முன்னாள் ஏர்ஏசியா இந்தியா) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலைத் தன்மை மிக்க விமான எரிபொருளை (SAF) பயன்படுத்தி மேற்கொண்ட தனது முதல் உள்நாட்டு விமானச் சேவையினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • விமானத்தினால் உற்பத்தி செய்யப்படும் உமிழ்வைக் குறைப்பதற்காக 1 சதவிகிதம் நிலைத் தன்மை மிக்க விமான எரிபொருளுடன் விமான எரிபொருளைக் கலந்து உபயோகித்தது.
  • ஜெட் எரிபொருளில் 1% நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் கலவையைச் கலப்பதற்கான இலக்கினை நிர்ணயித்தால், இந்தியாவிற்கு ஆண்டிற்கு 14 கோடி லிட்டர் நிலைத் தன்மை மிக்க விமான எரிபொருள் தேவைப்படும்.
  • மேலும் அதிக இலட்சியமிக்க இலக்காக, 5% நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் கலவையை இலக்காகக் கொண்டால், இந்தியாவிற்கு ஆண்டுக்கு 70 கோடி லிட்டர் SAF தேவைப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்