"Towards Common Criteria for Sustainable Fuels" என்ற தலைப்பிலான இந்த அறிக்கை சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்பட்டது.
நிலையான எரிபொருள் பயன்பாடு ஆனது 2035 ஆம் ஆண்டிற்குள் நான்கு மடங்காக அதிகரிக்கும் என்று IEA கூறுகிறது.
போக்குவரத்து மற்றும் தொழில்துறையில் புதைபடிவ எரிபொருள்களை சார்ந்து இருக்கும் நிலையைக் குறைக்க உயிரி எரிபொருள்கள், உயிரி வாயுக்கள் மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட ஹைட்ரஜன் அவசியமாகும்.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி நிலையான எரிபொருள்கள் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய்த் தேவையை ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் குறைக்கின்றன.
உயிரி வாயுக்கள் மற்றும் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் திரவ உயிரி எரிபொருள்கள் ஆனது தற்போது உலகளாவிய போக்குவரத்து எரிசக்தி தேவையில் 4% பங்கினைக் கொண்டுள்ளன.
பிரேசில் போன்ற நாடுகள் மொத்த எரிசக்தி நுகர்வில் சுமார் 10% என்ற அளவில் புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன.
2035 ஆம் ஆண்டிற்குள், நிலையான எரிபொருட்கள் ஆனது உலகளவில் சாலைப் போக்குவரத்தில் 10%, விமானப் போக்குவரத்தில் 15% மற்றும் கப்பல் எரிபொருள் தேவையில் 35% ஆகியவற்றை வழங்க முடியும்.
நிலையான எரிபொருட்களில் ஒட்டு மொத்த முதலீடுகள் ஆனது 2035 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும் என்ற நிலையில்இது சுமார் 2 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.