TNPSC Thervupettagam

நிலையான நகர மேம்பாடு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம்

June 5 , 2021 1522 days 610 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான நிலையான நகர மேம்பாடு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒத்துழைப்பிற்கான திட்டங்களை அமல்படுத்தவும் அதற்கான மூலோபாயங்களைக் கண்டறியவும் வேண்டி ஒரு கூட்டு செயற்குழு  அமைக்கப் படும்.
  • இந்தக் கூட்டுச் செயற்குழுவின் சந்திப்பானது வருடத்திற்கு ஒரு முறை ஜப்பானிலும் இந்தியாவிலும் என மாறி மாறி நடைபெறும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழான ஒத்துழைப்பு ஆனது 5 ஆண்டுகள் வரை தொடரும், அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு அது தானாகவே புதுப்பிக்கப்படும்.
  • இது நகரத் திட்டமிடல், மலிவான வீட்டுவசதி, வாடகை வீட்டு வசதி, பொலிவுறு நகரங்கள் மேம்பாடு போன்ற பல நிலையான நகர மேம்பாட்டுப் பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்