TNPSC Thervupettagam

நிலையான மின்கல மறுசுழற்சி செயல்முறை

June 30 , 2025 12 hrs 0 min 15 0
  • BatX எனர்ஜிஸ் நிறுவனமானது, லித்தியம்-அயனி மின்கல வேதியியலுக்குப் புறம்பான ஒரு பிரத்தியேக குறைந்த வெப்பநிலை, குறைந்த அழுத்த நீர்ப்பகுப்பு உலோகவியல் செயல்முறையை உருவாக்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, லித்தியம்-அயனி மின்கலங்களுக்கான உள்நாட்டு மின்கல மறு சுழற்சி செயல்முறையை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஒரு செயல்முறையானது, பயன்படுத்தப்பட்ட சில மின்கலங்களிலிருந்து மின்கல உற்பத்தித் தர லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றினை மீட்டெடுக்கிறது.
  • அவர்களின் தொழில்நுட்பம் என்பது அனைத்து வகையான லித்தியம்-அயனி மின் கல வேதியியல்களுடனும் செயல்படுகிறது.
  • இந்தச் செயல்முறையானது ஈரப் பதமான மற்றும் உலர்ந்த black mass எனப்படும் ஒரு செயல் முறையின் எஞ்சியப் பொருட்களின் மீட்பு மூலம் 97–99% மீட்பு விகிதங்களை அடைகிறது.
  • இது சேகரிப்பு, துண்டாக்குதல், உலோகக் கசிவு மற்றும் சுத்திகரிப்பு என ஒரு முழு சுழற்சியையும் உள்ளடக்கியது.
  • காப்புரிமை பெற்ற இந்தத் தொழில்நுட்பம் ஆனது மிக முழுமையாக இந்தியாவில் உருவாக்கப் பட்டது என்பதால் இது இறக்குமதி செய்யப்பட்ட சில உபகரணங்களின் தேவையைக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்