நிலையான முறையில் நகர்ப்புறத்தைக் குளிர்மயமாக்குதல் கையேடு
November 10 , 2021
1378 days
550
- நிலையான முறையில் நகர்ப்புறத்தைக் குளிர்மயமாக்குதல் கையேடு என்பது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையாகும்.
- எதிர்காலத்தில் நகரங்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பம் மிகுந்ததாக மாறும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
- இது நிலையான முறையில் நகர்ப்புறத்தைக் குளிர்மயமாக்குதல் பற்றிய தீர்வுகளின் கலைக் களஞ்சியமாகும்.
- உலக நகரங்கள் உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைகின்றன என்று இந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நகர்ப்புற வெப்பத் தீவுகளின் தாக்கமே இதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

Post Views:
550