நிலையான மேம்பாட்டு இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் - போபால்
May 17 , 2023 807 days 407 0
மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டாய நிலையான மேம்பாட்டு இலக்குகளின் (SDG) உள்ளூர்மயமாக்கலை ஏற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக மாறியுள்ளது.
இந்த நகரமானது உள்ளாட்சி அமைப்புகளின் திறன் மற்றும் உறுதிப்பாடுகளை வெளிப் படுத்தும் தன்னார்வ உள்ளூர் மதிப்பாய்வுகளை (VLR) மேற்கொள்ளும்.
அந்த மாநில முதலமைச்சர் ‘நடவடிக்கைகளுக்கான செயல்பாட்டு நிரல்: நிலையான நகர்ப்புற மாற்றம்’ என்ற செயல்திட்டத்தினைப் போபால் நகரில் தொடங்கி வைத்தார்.
மக்கள், கிரகம் மற்றும் செழிப்புக்கானச் செயல்திட்டமாக 17 நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் 169 இலக்குகளை உள்ளடக்கியச் செயல்பாட்டு நிரல் 2030 என்ற ஒரு செயல்திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது.