TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்குகள் அறிக்கை 2021

July 13 , 2021 1440 days 697 0
  • இது ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals – SDG) மீதான உயர்மட்ட அரசியல் மன்றத்தின் 2021 ஆம் ஆண்டு மாநாட்டில் வெளியிடப்பட்டது.

முக்கியத் தகவல்கள்

  • 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய SDG தரவுத்தளத்தில் 115 ஆக இருந்த குறிகாட்டிகளின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 211 ஆக உயர்ந்துள்ளது.
  • இருப்பினும், கோவிட்–19 பெருந்தொற்றானது உலகளவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்ற செயல்பாடுகளில்  பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
  • SDG 1 : உலகளாவிய ஏழ்மை வீதம் ஆனது 2030 ஆம் ஆண்டில் 7% ஆக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • SDG 2 : 5 வயதிற்குட்பட்ட 22% குழந்தைகள் பசியினாலும் 6.7% குழந்தைகள் உணவு வீண் ஆவதினாலும், 5.7% குழந்தைகள் அதிக எடையினாலும் அவதிப்படுகின்றனர்.
  • SDG 3 : கோவிட்-19 பெருந்தொற்றானது சுகாதார முன்னேற்றத்தை நிறுத்தியுள்ளது அல்லது மாற்றியமைத்துள்ளது. மேலும் அது ஆயுட்காலத்தையும் குறைத்துள்ளது.
  • SDG 4 : 2020 ஆம் ஆண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில் 9 சதவீதத்தினர் குறைந்தபட்ச வாசிப்புத் திறன் நிலைக்குக் கீழ்நிலையில் உள்ளனர்.
  • SDG 5 : தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 25.6 சதவீதத்தினர் பெண்கள், அதில் 36.3 சதவீதத்தினர் உள்ளாட்சி அரசுப் பிரதிநிதிகள் பொறுப்பினையும் மற்றும் 28.2 சதவீதத்தினர் நிர்வாகப் பொறுப்பினையும் வகிக்கின்றனர்.
  • SDG 6 : 2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாதவர்களாகவும் 3.6 பில்லியன் மக்கள் பாதுகாப்பான துப்புரவு வசதியற்றவர்களாகவும் உள்ளனர்.
  • SDG 7 : 2.6 பில்லியன் மக்கள் அபாயகரமான மற்றும் செயல்திறனற்ற சமையல் முறையினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.
  • SDG 8 : கோவிட்-19 தொற்றானது 255 பில்லியன் அளவிலான முழுநேர வேலை இழப்பு ஏற்பட வழிவகுத்துள்ளது.
  • SDG 9 : நடுத்தர மற்றும் உயர்தர தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்தியானது 2020 ஆம் ஆண்டில் பொருளாதார மீள்விற்கு உதவியுள்ளது.
  • SDG 10 : 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 100,000 நபர்களுள் 311 பேர் அகதிகளாக உள்ளனர்.
  • SDG 11 : உலகின் நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோர் பொதுப் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளனர்.
  • SDG 12 : 2000 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் உலகளாவிய பருப்பொருள் தடமானது 70% வரை உயர்ந்துள்ளது.
  • SDG 13 : 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையானது 1.2 டிகிரி செல்சியசாக உள்ளது.
  • SDG 14 : 2008 ஆம் ஆண்டில் 400 ஆக இருந்த உயிரற்றப் பகுதிகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 700 ஆக அதிகரித்துள்ளது.
  • SDG 15 : 2000 முதல் 2020 வரையிலான காலகட்டத்தின் போது 100  மில்லியன் ஹெக்டேர் அளவிலான வனப்பகுதிகள் அழிந்துள்ளன.
  • SDG 16 : 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை 160 மில்லியனாக உயர்ந்துள்ளதுஇது இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு உயர்வாகும்.
  • SDG 17 : சுமார் 3.7 பில்லியன் மக்களுக்கு (உலக மக்கள் தொகையின் பாதியளவு) இன்னும் இணைய வசதி கிடைக்கப் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்