TNPSC Thervupettagam

நிவேஷக் தீதி கட்டம் II

September 6 , 2025 6 days 32 0
  • முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA) ஆனது கிராமப்புறப் பெண்களிடையே நிதி சார் கல்வியறிவை ஊக்குவிப்பதற்காக நிவேஷக் தீதியின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது.
  • நிதி ரீதியாக தகவல் பெற்ற மற்றும் தகவமைப்பு கொண்ட கிராமப்புற சமூகத்தினை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
  • IEPFA, பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் (MCA) கீழ் செயல்படுகிறது.
  • இந்தத் திட்டமானது, மக்களிடம் விழிப்புணர்வினை விரிவுபடுத்தியது, ஊடாடும் பயிற்சித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது மற்றும் அடிமட்ட அமைப்புகளுடன் கூட்டுறவினை மேற்கொண்டது.
  • இது பெண்கள் தலைமையிலான நிதி அதிகாரமளித்தல், சேமிப்பு, முதலீட்டுப் பாதுகாப்பு, மோசடித் தடுப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தியது.
  • கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நிதிக் கல்வியை கடைநிலை வரை வழங்குவதை இந்திய அஞ்சல் பண வழங்கீட்டு வங்கி (IPPB) ஆதரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்